இன்று கோலாலம்பூர், பங்சாரில் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளும் ஒரு கூட்டத்தை நடத்தின. அக்கூட்டத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட்டும் அங்கு இல்லை.
கிடைத்த தகவலின்படி, பெர்சத்துவை அதன் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் பிரதிநித்தார். அவரே கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.
பாஸ் கட்சியின் சார்பில் அதன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் மற்றும் உதவித் தலைவர் இட்ரீஸ் அஹமட் ஆகியோர் பங்கேற்றனர்.
காலை மணி 11 அளவில் தொடங்கிய அக்கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு நடந்ததாக கூறப்படுகிறது.