பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வும் பாஸும் ஒத்துழைப்புக்காக செய்து கொண்டிருக்கும் ஏற்பாட்டை சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி வரவேற்றுள்ளார்.
பெர்சத்து, பாஸ் கட்சிகள் முதிர்ச்சியுடனும் தலைமைத்துவ பாங்குடனும் மலேசியர் அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.
பாஸ், பெர்சத்து கட்சிகளின் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும் பிகேஆர் அக்கட்சிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் சொன்னார்.
பாஸும் பெர்சத்துவும் நேற்று இரகசியமாகச் சந்தித்து பேச்சு நடத்தின. அக்கூட்டத்தில் அவ்விரு கட்சிகளின் தலைவர்களோ பெர்சத்துவின் அவைத் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டோ கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பி.கேஆரும், பாஸ் கட்சியும் இணந்து நடத்துகிற சதிகார சதிதிட்டத்தில் மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை பி.என். ஆட்சி பீடத்தில் அமரப்போகிற்து.