சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், விசாரணைக்காக ஐந்து நாள் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 29-இல் , அம்பாங் தாமான் கோசாஸில் சூதாட்ட மையங்கள் செயல்படுவதாகக் கூறி அதிரடியாக அம்மையங்களுக்குள் நுழைந்து சோதனைகளை நடத்தியதற்காக நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
மெஜிஸ்ட்ரேட் முகம்மட் பிர்டவுஸ் சைடினா அலி ஐந்து நாள்களுக்கு அவரைத் தடுத்து வைக்க உத்தரவிட்டார். அடுத்த செவ்வாய்க்கிழமை வரை அவர் காவலில் இருக்க வேண்டி வரும்.
மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலிருந்து அவரை வெளியில் அழைத்து வந்தபோது அந்தச் சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர், “Tauke judi kebal (சூதாட்டம் நடத்துவோரை ஒன்றும் செய்ய முடியாது)” என்று சத்தமிட்டார்.
ஒன்றும் செய்ய முடியாது தான்! அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்? உங்களால் செய்ய முடியாததை மற்றவர்கள் செய்கிறார்கள்! அவ்வளவு தான்!
2.6billiyanai kalavaadiya kullanarigalaiye ondrum seiya iyalaatha namathu naattil, kosukkadi vishayamaana soothaatta panju mittaaikalai ennathaan seithuvida mudiyum?
அரசியல் நாகரீகம் தெரியாத குட்டை குழப்பி ! இவனெல்லாம் ஒரு தலைவன் ? நாடு உருப்படும் !!!
என்னது…ஒரு ஆணியையும் புடுங்க முடியலையா..நாட்டில் கள்ளத்தனமாக நுழைந்த ‘உங்களவர்’ களால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. உணவுப் பொருள் விலையேற்றத்துக்கும், சுகாதாரப் பிரச்சினைக்கும் அவர்கள் தான் காரணம். அவர்கள் எல்லாம் சுலபமாக அடையாளக்கார்டு பெறும்போது இந்த சூதாட்டம் உன்னை என்ன செய்தது? பணம் உள்ளவன் சூதாடுகிறான். அதனால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை…சுகாதார சீர்கேடும் இல்லையே…எனவே கள்ள சூதாட்ட மையங்கலை நல்ல சூதாட்ட மையங்களாக ஆக்குங்கள்.
பி.என். ஆட்சிசெய்யும் மாநிலங்களிலும் சூதாட்டம், காமக்கலியாட்டம், போதைப்பொருள் விநியோகம் எல்லாம் சர்வ சாதாரனமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது இதையெல்லாம் கண்டும் காணாமல் மத்திய , மாநில அரசுகள் இயங்கிக் கொண்டும் இருக்கும் போது காவல் துறை செய்ய வேண்டிய சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறான் சிலாங்கூரில் ஜமால் என்கிற குண்டர் குழு தலைவன்.