சாபாவைப் பின்பற்றி சரவாக்கும் பாலியல் குற்றவாளி எஸ். செல்வகுமாருக்குத் தடை விதித்துள்ளாது.
செல்வகுமார் அம்மாநிலத்துக்குள் நுழைய முயன்றால் தடுக்குமாறு மாநில அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் கென் லெபன் கூறினார்.
செல்வகுமாரை மாநிலத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சரவாக்கில் பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
பாலியல் குற்றங்களுக்காகவும் வேறு பல குற்றங்களுக்காகவும் கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த செல்வகுமார் நேற்று காலை மலேசியா திரும்பினார்.
-பெர்னாமா
முன்னால் குற்றவாளிக்கும் தடை…அரசியல்வாதிகளுக்கும் தடை …நல்லா பேயறாங்கப்பா…