மலேசியாவின் மேம்பாட்டுக்கு அம்னோவும் பிஎன்னும்தான் காரணம் என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் பாராட்டியதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துதிபாடிகள் துள்ளிக் குதித்தார்கள் என டாக்டர் மகாதிர் மகாதிர் முகம்மட் கூறினார்.
ஆனால், முகைதின் பாராட்டியது அன்றையை அம்னோ/பிஎன்னை. இவர்களோ இப்போதைய அரசாங்கத்தைத்தான் அவர் பாராட்டுகிறார் என்றெண்ணிப் புளகாங்கிதம் அடைந்தனர் என முன்னாள் பிரதமர் சாடினார்.
அதன்பின் மகாதிர், பிரதமர் நஜிப்பைக் குறைகூறத் தொடங்கினார். அவர் மலேசியாவின் பெயரைக் கெடுத்து விட்டார் என்றார்.
“ஒரு நேரத்தில் மலேசியா ஆசிய புலி என்று புகழப்பட்டது. ஆனால், இன்றோ, மலேசியா ஊழல்மிக்க நாடு என்றுதான் உலக முழுவதும் பிரபலமாகியுள்ளது.
“மலேசியாவின் அரசாங்கத்தையும் மேம்பாட்டையும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். மலேசியா முன்போல் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இல்லை”, என மகாதிர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார்.