மூத்த அமைச்சர் விலகலா? அது குறும்புப் பேச்சு- முஸ்டபா சாடல்

mustafaமூத்த    அமைச்சர்    ஒருவர்    பதவி    விலகுவதாக   உலவும்    வதந்திக்குப்  பொதுமக்கள்    செவிசாய்க்கக்  கூடாது     என   அனைத்துலக  வாணிக,  தொழில்   அமைச்சர்   முஸ்டபா   முகம்மட்   வலியுறுத்தினார்.

“தேர்தல்   நெருங்க   நெருங்க   இப்படிப்பட்ட    அதிகபிரசங்கித்தனங்கள்   அதிகமாகும்.   சமூக   வலைத்தளங்களில்   பரப்பிவிடப்படும்    இப்படிப்பட்ட     செய்திகளை   மலேசியர்கள்   நம்பிவிடக்  கூடாது”,  என்று   நேற்றிரவு   கோட்டா   பாருவில்   அவர்    கூறினார்.

மூத்த   அமைச்சர்   ஒருவர்    பதவி    துறந்ததாக     சிலாங்கூர்    மந்திரி    புசார்   டிவிட்டரில்    பதிவிட்டிருந்தது    குறித்து    முஸ்டபாவிடம்   வினவியதற்கு   அவர்  அளித்த  மறுமொழி    இது.