மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), வருங்காலத்தில் நாட்டில் தகுதியானவர்களுக்கே விருது வழங்கப்படுவதை உறுதி செய்ய விருது பெறுவோரின் பின்னணியை ஆராய தயாராகவுள்ளது.
இப்போது, கேட்டுக்கொள்ளப்படும் வேளைகளில் மட்டுமே அவர்களின் பின்னணி ஆராயப்படுகிறது என தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் கூறினார்.
“சம்பந்தப்பட்ட தரப்புகள் கேட்டுக்கொண்டால் எல்லாருடைய பின்னணிகளையும் ஆராய்வோம்”, என காஜாங்கில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
‘டத்தோ’க்கள் ‘டத்தோஸ்ரீ’கள் போன்றோர் இரகசிய கும்பல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளிவந்திருப்பது குறித்து சுல்கிப்ளி கருத்துரைத்தார்.
ஹஹஹஹஹஹஹ. இப்போதுதான் கண் திறந்தா? இத்தனை ஆண்டுகள் விருது வாங்கியவர்கள் எல்லாம் ஒழுங்கா? திருடன் கொள்ளையன் கொலையாளிகள் இன்னும் நாட்டு துரோகிகள் எல்லாரும் பெரிய பட்டத்தோடு வளம் வருவது தெரியாதா என்ன? மலேசியர்களுக்கு கண் அவ்வளாக தெரிவதில்லை.
சுங்கைபுசார் அம்னேதலைவர் டத்தோஸ்ரீ
சாமான்பின்னனியை ஆராந்து பட்டத்தை
மீட்க்கசெய்யுங்கள்.ஜாமானால் பட்டத்துக்கே
இழுக்கு.இதில்சிவப்பு சட்டைசெய்யும்
அட்டகாசம் தாங்கல.