மலேசியா மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில், சிங்கப்பூரில் மலேசியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு உள்பட, குறுக்கிடாது.
“குறிப்பிட்ட ஒரு வழக்கில் தலையிட வேண்டும் என்று நெருக்குதல் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிவோம்”, என சிங்கப்பூருக்கான மலேசிய தூதர் இளங்கோ கருப்பண்ணன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான எஸ். பிரபாகரன்,30, போதைப் பொருள் கடத்தலுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் அரசாங்கம், சிங்கப்பூருக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கேட்டுக்கொண்டு நீதிமன்றத்தில் நீதிமுறை மேலாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அவருக்கு 2014 செப்டம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடுகள் எதுவும் பலனளிக்கவில்லை.


























neegelum ஒரு இஸ்லாமியர் ,என்றல் முடியும் Malaya அரசாங்கம் கவனிக்கும் ….மஎ