1எம்டிபி குறித்து இதுவரை வெளிவந்தது பாதிக் கதைதான், முழுக் கதையும் தெரிந்தால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என்று இரண்டாம் நிலை நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி கூறியதாக த எட்ஜ் டெய்லி அறிவித்துள்ளது.
“என்ன தவறு நடந்தது என்பதை பிஏசி(பொதுக் கணக்குக் குழு), ஏஜி (தலைமைக் கணக்காய்வாளர்) ஆகியோரால்கூட துல்லியமாகக் குறிப்பிட இயலவில்லை.
“பணம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றப்பட்டது என்பது மட்டும் போதாது. அது பாதிக் கதைதான். குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் முழுக் கதையும் தெரிய வேண்டும் ”,என்றாரவர். ஜொஹாரி, இன்று மலேசிய தொழிலியல் மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மதிய விருந்தில் கலந்துகொண்டு பேசினார்.
1எம்டிபி தொடர்பில் சிங்கப்பூர் பல வங்கிப் பொச்றுப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுத்தது, இங்கு அதிகாரிகள் அப்படிச் செய்யவில்லையே என்று வினவப்பட்டதற்கு ஜொஹாரி மறுமொழி அளித்தார்.
“அது சிங்கப்பூரில் நடந்தது, மலேசியாவில் அல்ல. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிங்கப்பூரர்கள். அவர்கள் அவர்களின் வாடிக்கையாளர்கள் யார் என்று தெரியாமலேயே செயல்பட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் பற்றி அறியாமல் அவர்களிடமிருந்து பணம் வாங்கலாமா?
“அவர்கள்மீது நடவ்வடிக்கை எடுக்காவிட்டால் சிங்கப்பூர் நிதிக் கழகங்களின் பெயர் கெட்டு விடும் என்பதால் சிங்கப்பூர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று”, என்றார்.
1 MDB என்ற கொழுத்த ஆட்டை தின்ற ஓநாய்களிடமே அதைப்பற்றி வினவினாள் எப்படி ? போனது போனதுதான் ! ஒட்டுமொத்த ஓநாய்களையும் ஒழித்தால்தான் ஒருவேளை நாடு மீட்சிபெற வாய்ப்புண்டு.