டாக்டர் மகாதிர் முகம்மட் எதிரணியில் அதிகாரத்துவப் பதவி எதிலும் இல்லை என்பதால் அவருடன் தாம் நடத்தும் விவாதத்தை எந்தத் தொலைக்காட்சி நிலையமும் நேரலையாக ஒளிபரப்பாது எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
வரும் சனிக்கிழமை கோலா கங்சாரில் நடைபெறுவது அரசாங்கமும் எதிரணியும் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமல்ல என்றும் அது இரண்டு தனிப்பட்டவரிடையே நிகழும் விவாதம் என்றும் அவர் சொன்னார்.
“அவர் எதிரணியில் எந்தப் பதவியும் வகிக்கவில்லை. எதிரணித் தலைவர் அல்ல. அப்படி இருந்தால் எதிரணி vs அரசாங்க விவாதமாக அமைந்திருக்கும்.
“நானும் அரசாங்கத் தலைவன் அல்ல. ஆகவே, இது இரண்டு தனிப்பட்டவருக்கிடையே நடப்பது. முக்கியமற்ற இருவருக்கிடையே நிகழ்வது அதனால் அரசாங்க ஒளிபரப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இயலாது”,என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறினார்.
ஆகா! ஆகா! இது நடக்காது என்பது உறுதி ஆகும் போலிருக்கு!
ஒரு ஊருல ஒரு காக்க இருந்துச்சா ,அது ஒரு நாலு பாட்டி சுட்ட வடைய திருடிரிச்சா , அத நரி பாத்துருச்சா , இப்ப யாரு கெட்டிக்காரனு போட்டியா , இதையும் நாமெல்லாம் வேல வெட்டி இல்லாம எதிர்பாத்துக்கிட்டு இருக்கிறோம் ! ஆஹ ஆஹா சரியான போட்டி !! திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !