பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்து கொண்டிருப்பதால் இனி பெர்சத்துவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என பாஸ் அறிவித்துள்ளது.
பாஸுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் எந்தவொரு கட்சியும் அதன் எதிரிக் கட்சிகளான டிஏபி அல்லது பார்டி அமனா நெகரா(நெகாரா)வுடன் ஒட்டி உறவாடக் கூடாது என்பது ஒரு நிபந்தனை என பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறினார்.
“……ஆக, கதவு அடைக்கப்பட்டுவிட்டதாக வைத்துக்கொள்லுங்கள். இதுதான் எங்களின் நிலைப்பாடு”, என்று அவர் கோத்தா பாருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நன்றி!
ஓட்டு உண்டு! மறந்து விடாதீர்கள்!
சரிதாண்டா வெங்காயம்.