மலேசிய கால்பந்து சங்கத் தலைவர் போட்டியில் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கு வழிவிட்டு அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா விலகிக் கொண்டிருக்கிறார்.
ஜோகூர் இளவரசருக்கு மரியாதை தெரிவித்து போட்டியிலிருந்து விலக முடிவு செய்ததாக அவர் சொன்னார். இனி, அவர் போட்டியின்றி எப்ஏஎம் தலைவராகலாம்.
“அவர் எப்ஏஎம்- முக்கு முக்கிய சொத்து. ஜோகூர் சுல்தானின் ஆதரவு மலேசியக் கால்பந்துக்கு மிகப் பெரிய கெளரவமுமாகும்”, என அனுவார் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.