தம்மை ராஜா போமோ என்று சுயமாக முத்திரை குத்திக் கொண்டு அலையும் இப்ராகிம் மாட் ஸின்னின் செயல்பாடுகள் ஹராமானவை என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) பிரகடனப்படுத்தியுள்ளது.
பல மாநிலங்களின் ஃபாட்வா குழுக்கள் இப்ராகிமின் சடங்குமுறைகளை ஆராய்ந்து பார்த்ததில் அவை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக ஜாகிம் தலைமை இயக்குனர் ஒத்மான் முஸ்தபா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முதன்முதலாக இப்ராகிம், மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 காணாமல்போனபோது அதைக் கண்டிபிடிப்பதாகக் கூறிக்கொண்டு விமான நிலையத்தில் பிரசன்னமாகி பெரும் பரபரப்பை உண்டு பண்ணினார்.