சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில் உள்ள அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசாவைச் சென்று காண்பதற்கு நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
அன்வார் குடும்பத்தார் அவர் மருத்துவமனை சென்றுவர அனுமதி கேட்டு செய்து கொண்டிருந்த விண்ணப்பத்தை ஏற்று சுங்கை பூலோ அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியதாக பெரித்தா ஹரியான் கூறியது.
நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வான் அசிசா,64, திடமாக இருப்பதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அன்வாரின் உதவியாளர் கூறினார்.
ஆனால், அவர் எதற்குச் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
அன்வார் சுமார் 45 நிமிடம் மருத்துவமனையில் இருந்ததாக அவரின் மகள் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறிற்று