பக்கத்தான் ஹராபான் அதன் தலைமைத்துவ விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண்பது அவசியம் என்பதை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் வலியுறுத்தினார்.
அதன் பிரதமர் வேட்பாளர், துணைப் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விகளுக்குக் கூட்டணியிடம் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லாதது குறித்து கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு மறுமொழி அளித்தார்.
“தலைமை குறித்தும் தொகுதி ஒதுக்கீடு குறித்தும் மனம்விட்டுப் பேசுவதற்கு கூட்டணி அனுமதிக்கிறது.
“இந்த விவகாரத்துக்கு விரைவிலேயே தீர்வு காண்பது ஹராபானுக்கு நல்லது”, என இன்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவில், பெர்சத்து தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் முகைதின் கூறினார்.