புதிய முதமைச்சர் அபாங் ஜொஹாரி ஒபெங் தலைமைத்துவத்தின் கீழ் சரவாக் மாநில அரசாங்கம் ஹூடுட் சட்டத்தை எதிர்ப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும்.
சரவாக் ஹூடுட் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகவும், அந்த விவகாரத்தில் சரவாக் முன்னாள் முதலமைச்சர் அடினான் சாதெம்மின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் அபாங் ஜொஹாரி கூறினார்.
சரவாக் பாரிசான் பங்காளித்துவக் கட்சிகள் சட்டம் 355 க்கான திருத்தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று கேட்டதற்கு அது பிரதமருக்கும் பிஎன் கட்சிகளுக்குமிடையிலான கூட்டத்தின் முடிவைப் பொறுத்தது என்று ஜொஹாரி கூறினார்.
தாம் முதலாவது கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டதாகவும், இரண்டாவது கூட்டத்தின் போது சீனாவில் இருந்ததாகவும் கூறிய ஜொஹாரி, தமக்குப் பதிலாக டக்ளஸ் உகா இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டாதாக அவர் மேலும் கூறினார்.
சரவாக்ஹுடுட்டுக்குஆணிஅடிச்சிரிச்சி,
மா,இ,க,ம,சி,சாவின்நிலைப்பாடு என்ன?
சரவாக்கில் யார் பெரும்பான்மையினர்? இவன் எப்படி முதலமைச்சர் ஆனான்? இங்கு பெரும்பான்மையினர் என்று ஆட்டம் போடும் அம்னோ நாதாரிகள் என் அங்குள்ள பெரும்பான்மையினருக்கு இடம் அளிக்க வில்லை? எல்லாம் மாமன் -மச்சான் நிழல் விளையாட்டு.
ஆப்பு.
விலைகொடுத்து வாங்காமல் இருந்தால் நல்லதே
அபாங் ஜொஹாரி ஒபெங் அவர்களே , தேசியமுன்னணி கூட்டணி கட்சிகளின் தலைவர்களில் சோறு சாப்பிடும் ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.