வான் அசிஸா குணமடைந்து வருகிறார், முகைதின் யாசின் தகவல்

 

Azizarecoveringயூனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவரும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலை பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் அவரது துணைவியார் நூராயினி அப்துல் ரஹ்மானுடன் சென்று நலன் விசாரித்தார்.

அவர் குணமடைந்து வருவதாகவும் தங்களை அவர் வரவேற்றதாகவும் முகைதின் அவருடைய முகநூலில் தகவல் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வான் அசிஸா மருத்துவமனையில் சேரிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, அவரது கணவர் அன்வார் இப்ராகிம், டாக்டர் சித்தி ஹம்சா முகமட் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அவரைக் கண்டனர்.