வட கொரியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தூதரை மலேசியா திரும்ப அனுப்பப்போவதில்லை என ஓரியெண்டல் டெய்லி நியுஸ் செய்தி ஒன்று கூறுகிறது.
பிப்ரவரி 12-இல், கேஎல்ஐஏ2-இல் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்-நாம் கொலை செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட நெருக்கடி நிலை இப்போது “மேம்பட்டிருந்தாலும்” நிலைமை இதுதான்.
“உறவுகள் இப்போது இறுக்கமாக இல்லைதான். உண்மையில் அவை (உறவுகள்) மேம்பட்டு வருகின்றன. நம் மக்களைத் திரும்ப அழைத்து வந்தது நமக்கொரு வெற்றி”, என வெளியுறவு துணை அமைச்சர் ரீஸால் கூறியதாக அந்நாளேடு அறிவித்துள்ளது.
“மலேசியாவும் கொரியாவும் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவில்லை. உறவுகள் முன்போல் இல்லை, அவ்வளதான்”. மலேசிய கால்பந்து அணி அடுத்த மாதம் வட கொரியாவை எதிர்த்து பியோங்காங்கில் விளையாட திட்டமிட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது ரீஸால் இவ்வாறு கூறினார்.