பினாங்கில் பெருகிவரும் செலவினத்தைச் சமாளிக்க அரசு நிலம் விற்கப்படுகிறதா?

dapபினாங்கு   அரசு   பல்கிப்  பெருகியுள்ள   அதன்  நடைமுறைச்   செலவினத்தை   எப்படிச்    சமாளிக்கிறது?  அரசுக்குச்  சொந்தமான  நிலங்களை   விற்கிறதா?  என்று  பிஎன்  பினாங்கு  முதலமைச்சர்    லிம்  குவான்   எங்கை   வினவியுள்ளது.

டிஏபி  முதன்முதலாக   பினாங்கைக்  கைப்பற்றிய    2008-இல்   இருந்ததைவிட   2017-இல்   செலவினம்   500  விழுக்காடு   அதிகரித்துள்ளதாக   பிஎன்   ‘வியூகத்   தொடர்புக்குழு’   கூறியது.

அதனுடன்  ஒப்பிடும்போது   கூட்டரசு   அரசாங்கத்தின்    செலவினம்    அதே  காலகட்டத்தில்   35.3  விழுக்காடுதான்   உயர்ந்தது     என   அக்குழு   ஓர்    அறிக்கையில்   கூறியது.

“பினாங்கு     அரசு    இந்த   500  விழுக்காட்டுச்   செலவின   அதிகரிப்பைச்    சமாளிக்கவும்  உபரி நிதியறிக்கை     தாக்கல்   செய்யவும்    வருமானம்   எங்கிருந்து   வந்தது     என்ற   கேள்விக்கு   லிம்   விளக்கமளிக்காமல்  புறக்கணித்து  விட்டார்.

“அது  கூட்டரசு  அரசாங்கத்தின்   நிதியளிப்பிலிருந்து  வந்ததா,   மதிப்பீட்டு   வரியை     ஐந்து   மடங்கு   அதிகரித்தீர்களே  அதிலிருந்தா,   அபராதங்கள்  மூலமாகவா,      குடிநீர்  கட்டணத்தை     நான்கு  மடங்கு   உயர்த்தினீர்களே   அதன்  மூலமாகவா?

“அல்லது   அரசு  நிலங்களை   அதிக  அளவில்   விற்றதன்    மூலமாக  வந்ததா?”,  என்றவர்கள்    வினவினர்.

லிம்   ப்ரி  மலேசியா  டுடேயின்   நேர்காணல்  ஒன்றில்,  திட்டங்களை   நல்லவிதமாக     செய்து  முடிக்க   கூடுதல்   நிர்வாகச்    செலவுகள்   அவசியம்    என்று   கூறியிருந்ததை   வைத்துக்கொண்டு   அவர்கள்   அவ்வாறு   வினவினர்.