உலக சமாதான தினத்திலும் மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளிலும் பசுபதிக்கு பொதுச்சேவை விருது

அன்பும் அகிம்சையும் சமுதாய மேம்பாட்டின் தூண்களாகக் கொண்ட மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலகெங்கும் பேணி வளர்க்கும் நோக்கில், 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காந்தி நினைவு அறக்கட்டளை (Gandhi Memorial Trust – GMT), பொதுச் சேவையில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் ஒரு உயரிய அமைப்பாக விளங்குகிறது. இந்த விருது சமுதாய மேம்பாட்டில் இலட்சியமிக்க சேவையைப் புரிந்தவர்களை கௌரவிக்க வழங்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் தத்துவங்களின் அடிப்படையில் சமூக மாற்றத்திற்காக உழைத்த மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இயக்குனர்  பசுபதி சிதம்பரம், GMT-யின் 2024 ஆண்டிற்கான பொதுச் சேவை விருதைப் பெற்றார்.

பசுபதியின் சமூக மாற்றப் பணிகளின் கதை நம்மை வியக்கச் செய்கிறது. 1995-ல் இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் உலக தமிழ் நிவாரண நிதி தொடங்கி, 2003-ல் கல்வியைப் பெருக்கும் தமிழ் அறக்கட்டளை உருவாக்கினார். 2011-ல் சமூகத்தில் தவித்து வந்த மாணஇளைஞர்களை காப்பாற்றும் நோக்கில் மைஸ்கில்ஸ் அறவாரியத்தினை நிறுவினார்.

இன்று, மைஸ்கில்ஸ் அறவாரியம் 34 ஏக்கர் பரப்பளவில், இளைஞர் உருமாற்ற திறன் மேம்பாட்டிற்கான ஒரு முன்னோடியாக திகழ்கிறது. இளைஞர்களின் கனவுகளை மாற்றும் பசுபதியின் அற்புதமான வழிகாட்டுதலுக்காக GMT விருதை வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது  அவரது சேவை மகாத்மாவின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியது என்பதைக் காட்டுகிறது.