போலீசின் அநியாயத்துக்கு ஒரு முடிவில்லை

“இதில் முரண்நகை என்னவென்றால், இந்தியர்கள் விடாமல் பிஎன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பதுதான். பிஎன்னின் வலுவான ஆதரவாளர்கள் அல்லவா அதனால், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.”

வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் போலீசுக்கு எதிராக புகார்

சத்து மலேசியா: அம்னோ-பிஎன் நிர்வாகத்தில் போலீசில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதுதான் நடக்கிறது. இந்தியர்கள் ஒரே சமூகமாக, ஒரே அடையாளத்தின்கீழ் ஒன்றுபடாதவரை இதுதான் நடக்கும்.

அக்கூட்டணியில் இருந்துகொண்டு இந்தியர்களின் நலனுக்குப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் மஇகாவும் மற்ற கட்சிகளும் ஒன்றுக்கும் உதவாதவை. சுயநலம் தேடுவோரே அங்குத் தலைவர்களாக உள்ளனர்.

ஜி.பழனிவேலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாலோ கே.எஸ். நல்லகருப்பனுக்கு செனட்டர் பதவி வழங்குவதாலோ இந்தியர்களின் துயர் தீரப்போவதில்லை.

ரிம30மில்லியன் செலவு செய்து குட்டி இந்தியாவைப் பளிச்சென்று வைத்துக்கொள்வதால் இந்தியர்களின் நிலை உயர்ந்துவிடாது. ஏழை இந்தியர்கள்மீது தலைவர்கள் காட்டும் பாசநேசமெல்லாம் அவர்களின் வாக்குகளுக்காகத்தான். 

இந்தியர்கள் இப்போது மஇகா, கெராக்கான், பிபிபி, எம்யுஐபி, மக்கள் சக்திக் கட்சி, பிகேஆர், டிஏபி, எச்ஆர்பி, பிஎஸ்எம் எனப் பல்வேறு  கட்சிகளாக சிதறுண்டு கிடக்கிறார்கள். இந்நிலையில் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்ட மலேசிய அரசியலில் அவர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.

ஏழை இந்தியர்கள் அடிஉதை படாமல் அவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை அமைச்சர்களாகவும் செனட்டர்களாகவும் வேடம் புனைந்து திரிகிறார்களே இந்தியர்களின் தலைவர்கள் அவர்களால் விளக்க முடியுமா?

நியாயம் வேண்டுவோன்: போலீசுமல்லவா இனவாதத்துடன் நடந்துகொள்கிறார்கள்.என்ன, கொடுமையடா, சாமி. அவர்கள் பொதுஒழுங்கைக் கட்டிக்காக்க வேண்டியவர்கள் அல்லவா, அந்தப் பொறுப்பு என்னவாயிற்று?

‘ஒரு சிலர்தான் இப்படி’ என்ற கதையெல்லாம் வேண்டாம். அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டளை உச்சியிலிருந்து வந்திருக்கும்போலத் தெரிகிறது. 

எல்லாரும் அர்ஜுனன்களாக மாறி நீதிக்காகப் போராடுவோம். 

அக்குசிந்தா: அந்தச் சிறுவர்களைத் தடுத்துவைக்கும் உரிமை போலீசுக்கு இல்லை. இதை மனித உரிமைக் கட்சி(எச்ஆர்பி) விட்டுவிடக்கூடாது. கடைசிவரை உங்களுக்கு ஆதரவாக இருந்து தார்மீக உதவிகளையும் நிதிசார் உதவிகளையும் செய்வோம்.

அனைவருக்கும் நியாயம்: எச்ஆர்பி-ஆல் 100 கையொப்பங்களைத்தான் பெற முடிந்ததா? அவர்களுக்குள்ள ஆதரவு இவ்வளவுதானா?

இவ்விசயத்தில் ஆதரவு தெரிவிப்பது எச்ஆர்பி-க்கு ஆதரவு தெரிவிப்பது ஆகாது. அது, அநீதிக்கும் போலீசின் முரட்டுத்தனத்துக்கும் எதிரான போராட்டம். போலீசார் இனவாதப் போக்குடன் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும்.

ஜனநாயகவாதி: ஆமாம், பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் என்னவானார்கள்? இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவு என்று நினைத்து ஒதுங்கிக்கொண்டார்கள் போலும்.

நீதி வேண்டுவோன்:எச்ஆர்பி பிரதிநிதி எஸ்.தியாகராஜன், “அவர்கள் ஏன் இந்தியர்களிடம் இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்? இப்படி நடந்துகொள்வது முதல்முறை அல்ல. போலீஸ் கொடுமைக்கு முடிவில்லை”, என்று கூறியுள்ளார்.

இதில் முரண்நகை என்னவென்றால், இந்தியர்கள் விடாமல் பிஎன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பதுதான். பிஎன்னின் வலுவான ஆதரவாளர்கள் அல்லவா, அதனால் அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

ஏன் மஇகாவின் உதவியை நாடவில்ல்லை?அது, பிஎன்னில் ஓர் உறுப்புக்கட்சிதானே. போலீசாரின் இந்தியர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதை பிஎன் அரசு என்றுமே தட்டிக்கேட்டதில்லை.ஆனாலும் இந்தியர்கள் ‘சம்சுவுக்காகவும் சில துணிமணிகளுக்காகவும், சிறிது உணவுக்காகவும் அவர்கள் விட்டெறியும் சிறிதளவு பணத்துக்காகவும் ஆசைப்பட்டு அதற்கே வாக்களித்து வருகிறார்கள்.

இந்தியர்களின் இந்தப் போக்கு மாறாதவரை, போலீசாரின் போக்கும் மாறப்போவதில்லை.

TAGS: