பொதுப் பிரம்படி: நஸ்ரி விளம்பரப்படுத்த ஒரு ‘புதுக் கவர்ச்சி அம்சம்’ கிடைத்து விட்டது

zaiகிளந்தான்   சட்டமன்றத்தில்,    பகிரங்க  பிரம்படித்   தண்டனை  வழங்க   அனுமதியளிக்கும்   ஷியாரியா   சட்டவரைவு   நிறைவேற்றப்பட்டிருப்பது   குறித்து   கருத்துரைத்த    முன்னாள்     தகவல்   அமைச்சர்    சைனுடின்  மைடின்,       அதை   ஒரு  “புதுச்   சுற்றாலாக்   கவர்ச்சி  அம்சமாக” சுற்றுலா,  பண்பாட்டு  அமைச்சர்   முகம்மட்   நஸ்ரி   அப்துல்    அசீஸ்   பயன்படுத்திக்  கொள்ளலாம்   என்றார்.

சவூதி  அராபியாவிலும்   புருணையிலும்   பொதுமக்கள்   முன்னிலைலயில்   பிரம்படி    தண்டனை  வழங்கப்படுகிறதுதான்.  ஆனால்,  அவை     மன்னராட்சி   நாடுகள்.  மலேசியாவோ   ஒரு  ஜனநாயக    நாடு.

“இது   வெளிநாடுகளில்   விற்பதற்குரிய   நல்ல   சுற்றுலா   பொருளாக   விளங்கும்.  முஸ்லிம் -அல்லாதார்,  குறிப்பாக   வளர்ந்த   நாடுகளில்    உள்ளோர்   ஜனநாயகத்தைப்  பின்பற்றும்    நவீன   மலேசியாவுக்கு   இந்தப்  பழங்கால,  காட்டுமிராண்டித்தனமான    தண்டனை   நிறைவேற்றப்படுவதை   நேரில்   காண  முடியும்.

“முஸ்லிம்- அல்லாதார்   சவூதி    அராபியாவில்   அதைக்   காண   முடியாது   என்பதால்     மலேசியாவுக்குத்    திரண்டு     வருவர்.  இங்கு   பார்ப்பதற்குத்   தடையில்லை”,  என்றவர்  கேலியாகக்  குறிப்பிட்டார்.

இச்சட்டவரைவு   நிறைவேற்றப்பட்டது   பிஎன்னின்   தோற்றத்தையும்  களங்கப்படுத்தியிருப்பதாக    சைனுடின்    குறிப்பிட்டார்.

இச்சட்டம்   நிறைவேற்றப்படுவதற்கு   பிஎன்  பாஸுடன்  ஒத்துழைத்து   வருவதுதான்   இதற்குக்  காரணம்    என்றாரவர்.