“அது சிக்கனமாக நடந்து கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. மக்கள் கொடுக்கும் வரிப் பணம் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதே கேள்வியாகும். இந்த விவகாரத்தில் அது நடக்கவில்லை என்பது நிச்சயம்.”
பிகேஆர்: என் எப் சி ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஆதாயத்தைத் தராது
உங்கள் அடிச்சுவட்டில்: இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. மாறாக கொள்கை அல்லது வர்த்தக மாதிரி பற்றியதாகும்.
கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்ற மறைமுகமான புரிந்துணர்வுடன் சேவகர்களுக்கு கடன்களைக் கொடுக்கும் இத்தகைய வர்த்தக மாதிரியிலிருந்து எதுவும் நல்லது விளைந்துள்ளதை நீங்கள் பார்த்துள்ளீர்களா?
ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள், தங்கம், எண்ணெய் பங்குகள் ஆகியவற்றை வாங்குவதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்தினர் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்கள் அதனைச் செய்ய முடியும். ஏனெனில் அந்தக் கடன்கள் அவர்களுக்கு வருமானம். மூலதனம் இல்லை. ஆபத்தும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.
உண்மையில் நாம் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டு விஷயத்தில் நாம் மூழ்கினால் உண்மையான பிரச்னையை நாம் மறந்து விடுவோம். சட்டப்படியான வழிகளில் அரசாங்கக் கருவூலத்திலிருந்து பணத்தை கறக்கும் திட்டம் தான் உண்மையான பிரச்னை.
சரவாக்கியன்_3ff9: அது சிக்கனமாக நடந்து கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. மக்கள் கொடுக்கும் வரிப் பணம் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதே கேள்வியாகும். இந்த விவகாரத்தில் அது நடக்கவில்லை என்பது நிச்சயம்.
மாடுகளில் முதலீடு செய்வதும் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளில் முதலீடு செய்வதும் வெவ்வேறு தொழில்கள். பிஎன் வேறு வகையாக வாதம் புரிந்தால் ஏன் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுடன் நிற்க வேண்டும். பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாமோ?
உண்மையில் கெந்திங் சூதாட்ட விடுதிக்குச் சென்று கூட உங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்கலாமே? அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அதனை முழுமையாக ஆதரிப்பது திண்ணம்.
எல்லாவற்றுக்கும் மேல் பரிதாபத்துக்குரிய மக்கள் பணம் சூறையாடப்படுகிறது.
எஸ்எம்சி 77 : அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீடு மாடுகள் தங்குவதற்காக வாங்கப்பட்டது என பிஎன் வாதாடலாமே? காரணம் தாங்கள் உயர்ந்த தரத்திலான மாடுகளை வளர்க்க விரும்புகிறோம். அதனால் அத்தகைய மாடுகள் உயர்ந்த தரத்திலான ஆடம்பர அடுக்கு மாடிகளில் தான் தங்க வேண்டும். உயர்ந்த தரத்திலான கவனிப்பை பெற வேண்டும் என்று கூட சொல்லலாமே?
வீரா: அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டை விற்றவருக்கும் என் எப் சி என்ற தேசிய விலங்குக் கூட தலைமை நிர்வாகிக்கும் இடையில் ஏதும் தொடர்பு உள்ளதா என்பதை முதலில் விசாரித்துப் பார்க்கவும்.