மென்மையாக்கப்பட்ட திருமணம் மற்றும் திருமண விலக்கு சட்டம் (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது

 

azalinaஇன்று நள்ளிரவுக்குப் பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் வழி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்றுகொள்ளப்பட்ட இந்தச் சட்டத் திருத்ததில் ஒரு பெற்றோரால் குழந்தைகள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த செக்சன் 88A மசோதாவிலிருந்து நீக்கப்பட்டது.

செக்சன் 88A ஒருதலைப்பட்ச மத மாற்றப் பிரச்சனையைத் தீர்க்கும் என்று தாம் நம்பவில்லை என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் கூறினார்.

“இதற்கு இன்னும் அதிகமான மற்றும் ஆழமான விவாதங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இது முடிந்துபோன கதையல்ல” என்று அவர் இன்றிரவு நாடாளுமன்றத்தில் கூறினார்.

சட்ட திருத்தத்திலிருந்து அகற்றப்பட்ட செக்சன் 88A:

“Section 88A. (1) Where a party to a marriage has converted to Islam, the religion of any child of the marriage shall remain as the religion of the parties to the marriage prior to the conversion, except where both parties to the marriage agree to a conversion of the child to Islam, subject always to the wishes of the child where he or she has attained the age of eighteen years.”

“(2) Where the parties to the marriage professed different religions prior to the conversion of one spouse to Islam, a child of the marriage shall be at liberty to remain in the religion of either one of the prior religions of the parties before the conversion to Islam.”

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செக்சன் 88A சட்டத் திருத்த மசோதாவில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.

அதற்கு மாறாக, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த முழு மசோதாவையும் பின்னொரு தேதியில் தாக்கல் செய்வதற்காக திரும்பப்பெற வேண்டும் என்று வாதிட்டனர்.