மெக்சிமஸ்: அழியா மை பயன்படுத்தத் தடை இல்லை

அழியா மையை பயன்படுத்த தடங்கல் எதுவும் இல்லை, தேர்தல் விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தால் போதுமானது என்று தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கு அரசமைப்புத் திருத்தம் தேவை என்று முன்னர் கூறியிருந்த சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அது பற்றி விளக்கம் தந்திருப்பதாக பிஎஸ்சி தலைவர் மெக்சிமஸ் ஒங்கிலி கூறினார்.

“இரண்டு வழிகளிலும் அதைச் செய்யலாம் என்றவர் விளக்கியுள்ளார். விதிமுறைகளில் அல்லது அரசமைப்பில் திருத்தம் செய்வதன்வழி அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றவர் விளக்கினார்.” இன்று பிஎஸ்சி-இன் இரண்டு மணிநேரக் கூட்டத்துக்குப் பின்னர் மெகிசிமஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

TAGS: