என்எப்சி (NFC) – தேசியப் பெரும் தீவன மையம்?

“சுய நலன் மேலோங்கும் போது சமூக நலன் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஊழல் தலை விரித்தாடுகிறது. அது தான் ‘திருடர்கள் ராஜ்யம்’.”

‘கௌகேட்’ ஊழலில் அதிகமான அம்னோ தலைவர்கள் சிக்குகின்றனர்

ரிக் தியோ: நம் நாட்டின் கடன் பெருகிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. அத்தகைய அட்டைகள் இருக்கும் வரை நாடு விரைவில் நொடித்துப் போகும்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலுக்கும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் அமைச்சரும் அவரது கணவரும் தனித் தனியாக வாழ வேண்டும். இல்லை என்றால் அவர் எப்படி சம்பந்தப்படாமல் இருக்க முடியும்? அமைச்சருடைய செல்வாக்கு இல்லாமல் அவரது கணவருக்கு எளிய வட்டியுடன் கூடிய அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடன் எப்படிக் கிடைத்தது?

ரே பயர்: சும்மா சொல்லக் கூடாது. அந்த நிறுவனம் தனது பெயருக்கு ஏற்ப இயங்குகிறது. அது பலருக்குத் தீவனம் (Feed) போடுகிறது.  ‘என்எப்சி – தேசியப் பெரும் தீவன மையம்?

கோசோங்கபே: இது போன்ற இன்னும் பல விவகாரங்கள் இருக்க வேண்டும். அவை விசாரிக்கப்படுவது இல்லை. அவற்றில் அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் நிறுவன அதிகாரிகள், வெளித் தணிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் துறை ஊழியர்கள் ஆகியோர் மூச்சு விடுவதற்குக் கூடத் தயங்குகின்றனர்.

சில நிறுவனங்கள் மீது மலேசிய நிறுவன ஆணையம் மிதமாக நடந்து கொள்கிறது. மற்றவை சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அல்லது கடும் அபராதங்களை எதிர் நோக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு: அம்னோ தீவிரமாக இருந்தால் அரசியல் பெரும் புள்ளிகளிடையே காணப்படுகின்ற தவறுகளைச் சரி செய்வதற்கான வேலையைத் தொடங்குவதற்கு கௌகேட் ஊழல் விசாரணை தொடக்கமாக இருக்க வேண்டும். ஷாரிஸாட் உண்மையில் அம்னோவை நேசித்தால் ‘மக்களுக்கு முன்னுரிமை’ என்னும் சுலோகத்தை மதித்தால் அவர் பதவி துறக்க வேண்டும்.

டிட்டான்: அந்த கௌகேட் ஊழல் கொழுந்து விட்டு எரிய நாம் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்எப்சி அவற்றை மறுத்து இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. போதுமான ஆதாரத்துடன் அது மறுக்கப்படவில்லை என்றால் இந்த அமைச்சரவையும் கறை படிந்ததுதான்.

ஷாரிஸாட் மீது கூறப்படும் புகார்கள் கடுமையானவை. அவர் சட்டப்படிப்பு படித்தவர். அவர் பிஎன் -னுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் சுமையாகி விட்டார். 13வது பொதுத் தேர்தல் நெருங்குவதால் அவர் தாமாகவே வெளியே போய் விட வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பிரச்சாரத் தீக்குழம்புகள் அவரை  உயிருடன் எரித்து விடும்.

ஷாரிஸாட் அவர்களே, பிஎன்-னை அவலத்திலிருந்து காப்பாற்றுங்கள்.

அடையாளம் இல்லாதவன்_3e86: அதிகாரிகள் மௌனம் சாதிக்கின்றனர். அவர்கள் மூச்சுக் கூட விடவில்லை.  அவர்கள் தொடர்ந்து அமைதியாக இருப்பார்கள். இன்னும் சில வாரங்களில் எல்லா வேகமும் தணிந்து  விடும்.

யார் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட மாட்டாது. ஊழல் பேர்வழிகள்  தொடர்ந்து நாட்டை வற்ற வைத்து விடுவார்கள்.

ஆகவே புதிதாக என்ன? மக்கள் வரிப்பணத்தை அந்த பிஎன் மோசடிப் பேர்வழிகள் தொடர்ந்து உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் ஆத்திரமாக வருகிறது.

அபாஸிர்: டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு மட்டுமே, தமது அமைச்சர்களும் அரசு நிறுவனத் தலைவர்களும் உட்பட அம்னோ தொடர்புடைய மனிதர்கள் சம்பந்தப்பட்ட எத்தனை ஊழல் நடைமுறைகளை தாம் கண்டும் காணாதது போல் இருந்தது தெரியும்.

அவர்கள் மீது மகாதீர் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பிரச்னை இவ்வளவு பெரிதாகி இருக்காது. மற்றவர்கள் சொல்வது போல மாடுகள் இப்போது ஒய்வெடுக்க கொட்டகைக்குத் திரும்பி விட்டன.

TAGS: