கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கக் காரணம் அம்னோதான் என்கிறார் பினாங்கு முதலமைசார் லிம் குவான் எங்.கோ அப்படி முடிவு செய்ததற்கு அவர் வருத்தமும் தெரிவித்துக்கொண்டார்.
“அது கோவின் விருப்பமாக இருக்காது என்றே நினைக்கிறேன்….அப்படி இருந்தால் அவர்(2008 பொதுத் தேர்தலில் தோற்றபின்னர்) கெராக்கான் தலைவராக தொடர்ந்து இருந்திருக்க மாட்டார்”, என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.
“அம்னோ என்ன விரும்புகிறதோ அதை நிறைவேற்றிக்கொள்ளும்…அவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள்”.
கோ-வைப் பதவியிலிருந்து அகற்ற அம்னோ நினைத்தது. அத்திட்டம் “நிறைவேறிவிட்டது” என்றாரவர்.