பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரௌனுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள ரிம90 மில்லியன் சம்பந்தப்பட்ட வழக்கில் பிரதமர் நஜிப் ஒரு சாட்சியாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் ஹனிபா மைடின் கூறினார்.
இந்த வழக்கில் ஒரு சாட்சியாக நஜிப் பாஸ் கட்சியாலோ அல்லது கிளேராலோ அழைக்கப்படலாம் என்று பாஸின் முன்னாள் வழக்குரைஞரும் தற்போது பார்ட்டி அமனா உறுப்பினருமான ஹனிபா கூறினார்.
நஜிப் ஒரு சத்தியப் பிரமாணப்பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் வழி சாட்சியம் அளிக்க முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த ஹனிபா, நஜிப் குறுக்கு-விசாரணை செய்யப்பட்டாக வேண்டும். ஆகவே, விசாரணையின் போது அவர் அங்கு இருப்பது ஒரு கட்டாயம் ஆகும் என்றார்.