பாஸுக்கு தாம் பணம் கொடுக்கவில்லை. அதனால்தான் பாஸ் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கின் முடிவுக்காக நாம் காத்திருப்போம். கிளேர் இப்போது குழப்பத்தில் இருக்கிறார் என்று நஜிப் கூறுகிறார்.
“பாஸுக்கு நாம் ரி90 மில்லியன் கொடுக்கவில்லை. அது பற்றி நான் கருத்துக் கூறமுடியாது, ஏனென்றால் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது”, என்று நஜிப் புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெற்ற அம்னோ சமூக ஊடக மாநாட்டில் இன்று பேசுகையில் கூறினார்.
ரியுகாஸல்-பிரௌன் பாஸ் கட்சி ரிம90 மில்லியனைப் பெற்றிருந்ததாக ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
அவருக்கு எதிராக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் யுகேயில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
marutthaan endraal athu unmayye