ஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார்.
சீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சப்னோ துகிஜோ எனும் அந்த 50 வயது பிலால், பெரித்தா ஹரியான் இணையப் பத்திரிக்கையிடம் அதனை ஒப்புக்கொண்டார்.
நடந்த சம்பவத்தை கூறுகையில், “அன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், குடியிருப்பாளர்கள் தங்களைக் காப்பாற்றிகொள்ள அருகிலுள்ள கோயிலுக்குச் செல்ல முயற்சித்தனர். ஆனால், வெள்ள நீரோட்டம் பலமாக இருந்ததால், அவர்களால் அங்குச் செல்ல முடியவில்லை. உண்மையில், முதலில் அவர்கள் சூராவ்வில் தங்க தயங்கினர், ஆனால், அச்சமயம் வெள்ளம் நீர் நெஞ்சளவுக்கு உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி அவர்கள் அங்கு தஞ்சம் புகுந்தனர்,” என்றார் சப்னோ துகிஜோ.
“அவர்கள் செல்லவிருந்த கோயில் சில மீட்டர் தூரத்தில்தான் இருந்தது, நான் மின்கம்பத்தில் கயிறு கட்டி, அவர்களை அங்குக் கொண்டுசெல்ல முயன்றேன், ஆனால் நீரோட்டம் பலமாக இருந்ததால் எங்களால் முடியாமல் போனது,” என்று மேலும் அவர் தெளிவுபடுத்தினார்.
“இறுதியில் அவர்களை நான் அங்குத் தங்க அழைத்தேன், அவர்களும் பாதுகாப்பு கருதி அங்கு தங்கினர்,” என்றார் அவர்.
ஜோர்ஜ்டவுன், பி ரம்பி வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 70 சீனர்களும் இந்தியர்களும் அந்த சூராவ்வில் தங்கியிருந்ததாக சப்னோ கூறினார்.
சமூக ஊடகங்களில் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல, ஒருவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் முக்கியம் என்றார் சப்னோ.
“சமூக ஊடகங்களில், பலர் என் செயலைக் கண்டித்துப் பேசியிருக்கலாம், ஆனால், வெள்ள நீரோட்டத்தில் அடித்துசெல்லவிருந்த அவர்களைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், அதுதான் நான் செய்த பெரும் பாவமாக இருந்திருக்கும்,” என்று பிலால் சப்னோ துகிஜோ கூறினார்.
மற்ற மதத்தவர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவுவது கூட இந்த மதத்தினருக்கு பெரிய சவாலாக உள்ளது-இதிலிருந்து என்ன தெரிகிறது? சபினோ துகிஜோ அவருக்கு நன்றியும் அன்னாரின் உதவிக்கு பலன் கிடைக்கும் ஆண்டவனின் பார்வையில். எந்த ஈன ஜென்மத்தின் வசை பாடல் அவனின் கடைசி காலத்தில் உணர்வான். துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திரத்திற்கு முன் இது போல் பேசவில்லையே– அப்போது இதுபோன்று செய்திகள் வெளியாவதில்லையே– அப்போது மூன்று இனங்களும் அண்ணன் தம்பி – இப்போது எதிரிகள்– காரியம் ஆன பிறகு அண்ணனா தம்பியாவது- நன்றி கெட்ட ஜென்மங்கள். அக்காலத்தில் எத்தனை மலாய்க்கார பிள்ளைகள் கோவிலுக்கு வந்து சாதம் பெற்றுள்ளார்கள்? உதவி செய்த நல்ல உள்ளத்தவனுக்கு இவ்வளவு எதிர்ப்பா? பேசவே எரிகிறது.
நன்றி பிலால்! (பிலால் என்பது புதிதாக இருக்கிறது) இது தான் மனிதம் என்பது. மனிதம் இல்லை என்றால் அப்புறம் என்ன கோவில், தேவாலயம், பள்ளிவாசல், புத்தக்கோவில்? நீங்கள் செய்தது சரியே!
தருமம் தலையைக் காக்கும்.
மனிதாபிமானம் தான் மனிதனின் புனிதம் ! அணைத்து மதங்களும் வலியுறுத்துவதும் அதுதான் ! இறை மனம் கொண்ட உங்களை இறைவன் ஆசிர்வதிப்பான் !! வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் பிலால் அவர்களே !!
மனிதாபிமானமிக்க செயல்…இதைக் கூட அரசியலாக்கி ஆதாயம் தேட விரும்புவோர் தற்கொலை செய்து கொள்வதே மேல். இல்லாவிட்டால் அண்மையில் அண்டை நாடொன்றில் மூன்று மதத்தினரும் ஒரே வளாகத்தில் கோயில் அமைத்து அவரவர் சமயப்படி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களின் ‘தீர்த்தத்தில்’ கொஞ்சம் வாங்கிக் குடிக்கலாம்.