ஏகிப்தின் வடக்கு சினாயில் ஒரு மசூதியில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் இன்று 235 க்கு உயர்ந்தாக எகிப்தின் அரசு தொலைக்காட்சி அரசு வழக்குரைஞரை மேற்கோள் காட்டி கூறுகிறது.
குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதிகள் மசூதியிலிருந்து தப்பி ஓடியவர்களையும் அம்புலன்ஸ்களையும் தாக்கினர் என்று அதனை நேரில் கண்டவர்களும் அரசு ஊடகமும் கூறின.
இது இப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய மிகக் கொடுமையான தாக்குதல் ஆகும்.
இத்தாக்குதலுக்கு இதுவரையில் எந்தத் தரப்பினரும் பொறுப் பேற்கவில்லை. ஆனால், 2014 ஆம் ஆண்டிலிருந்து எகிப்தின் ஆயுதப்படையினர் இஸ்லாமிய அரசில் இணைந்துள்ளவர்களுடன், குறிப்பாக சினாய் பகுதியில், போரிட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களும் இராணுவப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசு தொலைக்காட்சி செய்திப்படி, இத்தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டனர். 100 கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.