மலாய் ஆசியானின் அதிகாரப்பூர்வமான மொழியாக ஆக்கப்பட வேண்டும், ராய்ஸ் கூறுகிறார்

 

300 மில்லியன் அல்லது தென்கிழக்கு ஆசியாவின் பாதி மக்களால் பேசப்படும் மலாய் மொழி ஆசியானின் அதிகாரப்பூர்வமான மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தின் சமூக-பண்பாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் ராயிஸ் யாத்திம் கூறினார்.

இந்த வட்டாரத்தில் தகுதியில் உயர்ந்த மொழி என்ற முறையில் மலாய் ராஜதந்திரம் மற்றும் தொடர்புத்துறை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மொழியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றாரவர்.

“தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான மொழி மலாய். ஆனால் வருந்தும் வகையில், அது வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்படவில்லை, அதாவது, ராஜதந்திரம் மற்றும் தொடர்புதுறை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மொழியாக ஆசியானின் அதிகாரப்பூர்வமான சம்பிரதாயங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வைக்கப்பட்டுவதில்லை.”

இதை அவர் இன்று பேங்கோக்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இதற்கு முன்னதாக, ராய்ஸ் காபெனா என்ற மலேசிய தேசிய எழுத்தாளர்கள் மன்றங்களின் சம்மேளனம் மற்றும் மலாய் உலகம் இஸ்லாமிய உலகம் (டிஎம்டிஐ), தாய்லாந்து ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “மலாய் உலகக் கூட்டம் 2017” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு உரை ஆற்றினார்.