பிஎன் தலைவரின் வெற்றி அவரது மனைவியைச் சார்ந்திருக்கிறது, நஜிப் கூறுகிறார்

 

ஒரு பிஎன் தலைவரின் வெற்றி மற்றும் அவரது செயலாற்றல் திறன் அவரது மனைவி ஆற்றும் பங்கினைப் பொறுத்திருக்கிறது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

மனைவி உண்மையான நண்பராகிவிட்டால், அவருக்கு மகிழ்ச்சி அளித்து அவரது கடைமைகள், இதயம் மற்றும் மனம் ஆகியவற்றை புரிந்து கொண்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பின் பிரதிநிதியும் பெரும் வெற்றி அடைவார் என்று தாம் நம்புவதாக நஜிப் தெரிவித்தார்.

இச்செயல்பாடு வலியுறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கணவர் அவரது கடமையைச் செவ்வனே ஆற்ற முடியும், குறிப்பாக பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், என்று நேற்றிரவு மலாக்காவில் பிஎன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் துணைவியார்களின் நிகழ்ச்சியில் பேசிய நஜிப் கூறினார்.

அவருடன் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும்மலாக்கா முதலமைச்சர் இட்ரீஸ் ஹருணும் இருந்தனர்.

பக்தி என்றழைக்கப்படும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோரின் மனைவிமார்களின் பொதுநல மன்றம் எல்லாவற்றையும் உள்ளிட்ட வெற்றியாளராக கிரீடம் சூட்டப்பட்டது.

நஜிப் பக்தியின் தலைவர் ரோஸ்மா மன்சூரிடம் வெற்றிக் கேடயத்தை வழங்கினார்.