குடிநுழைவுத்துறை: 790,186 மலேசியர்கள் கருப்புப்பட்டியலில்

790,186   மலேசியர்கள்பல்வேறு  குற்றங்களுக்காக    நாட்டைவிட்டு   வெளியேற   முடியாதபடி   கருப்புப்பட்டியலில்   இடம்பெற்றிருக்கிறார்கள்  எனக்  குடிநுழைவுத்துறை    தலைவர்   முஸ்டபார்   அலி    கூறினார்.

இவர்களில்   447,890   பேர்     தேசிய   உயர்க்கல்விக்  கடனைத்    திருப்பிச்   செலுத்தாதவர்கள்.

138,028   பேர்   திவால்துறையால்   கருப்புப்பட்டியலிடப்பட்டவர்கள். 107,884  பேர்   வருமான   வரி  வாரியத்தின்   கருப்புப்பட்டியலில்   உள்ளவர்கள்.

ஊழியர்  சேமநிதி   வாரியமும்(இபிஎப்)    7024  பேரைக்   கருப்புப்பட்டியலிட்டு    வைத்துள்ளது.   சுங்கத்துறை  6,091 பேரை,   குடிநுழைவுத்துறை  1,543 பேரை.

வெளிநாடு   செல்வோர்    தங்கள்   பெயர்   கருப்புப்பட்டியலில்    உள்ளதா   என்பதை  விமான  நிலையத்திலேயே   தெரிந்துகொள்ளலாம்.  அதற்கான   வசதி   செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக   முஸ்டபார்    கூறினார்.

“கேஎல்ஐஏ   விமான  நிலையத்தின்   புறப்பாட்டு   மண்டபத்தில்   மூன்று   கணிப்பொறிகளை   வைத்துள்ளோம். இன்னும்   ஒரு   மாதத்துக்குள்   கேஎல்ஐஏ2-இலும்  பல  கணிப்பொறிகள்   வைக்கப்படும்”,  என்றாரவர்.