பாலி விமான நிலையம் மூன்றாவது நாளாக மூடப்பட்டது

இந்தோனேசியா அதன் இரண்டாவது பெரிய பாலி விமான நிலையத்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் எரிமலைச் சாம்பல் மேகமூட்டம் காரணமாக இன்று புதன்கிழமை மூடியது.

புகைமூட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். பாலி விமான நிலையம் குறைந்தபட்சம் வியாழக்கிழை காலை மணி 7.00 வரையில் (மலேசிய நேரம் காலை மணி 7.00) மூடப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில், 443 உள்நாட்டு மற்றும் அனைத்துலகப் பயணங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாலி விமான நிலையம் அகுங் மலையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 3,000 மீட்டர் உயரமான இம்மலையின் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு 1963 இல் ஏற்பட்டது. அதில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.