மற்றவற்றோடு எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரும் மகஜர் ஒன்று பிரதமர் துறை அலுவலகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைச் சமர்ப்பித்த கெராக்கான் துருன்கான் ஹர்கா மின்யாக் (கெர்தாக்) அமைப்பு ரோன்95 பெட்ரோலுக்கு ரிம1.90ஐ உயர்ந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
எரிபொருள் விலையை நிலைப்படுத்த வேண்டும், உதவித் தொகையைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் ஆகியவை அதன் மற்ற கோரிக்கைகளாகும்.
“மக்களின் இந்த மனுவுக்குப் பிரதமர் உரிய கவனம் செலுத்துவார் என நம்புகிறோம்”, என அந்த அமைப்பு கூறியது.