மலேசியா 20 ஆண்டுகளில் உலகின் கல்வி மையமாக மாறும்- இட்ரிஸ் ஜூசோ

நாட்டில்   உயர்க்கல்விமுறையில்   இப்போது   நிலவும்   வேகமும்  விறுவிறுப்பும்    தொடருமானால்   இன்னும்   20  ஆண்டுகளில்   மலேசியா  உலகின்   கல்வி   மையமாக   மாற்ம்  என்கிறார்   உயர்க்  கல்வி   அமைச்சர்    இட்ரிஸ்  ஜோசோ.

நாட்டின்   உயர்க்கல்வியை    உருமாற்ற   அரசாங்கம்    பல்வேறு    முயற்சிகளை   மேற்கொண்டு   வருவதாகவும்    அதன்  விளைவாக   உலகின்  தரவரிசை   பட்டியலில்    உள்ளூர்   பல்கலைக்கழகங்கள்   பலபடி    முன்னேற்றம்   கண்டுள்ளதாகவும்    அவர்    சொன்னார்.

“2012-இலிருந்து   நம்  உயர்க்கல்வி  யுனிவர்சிடாஸ்  21  பட்டியலில்  11படி  முன்னேறியுள்ளது. முன்பு  36வது   இடத்தில்   இருந்தது   இப்போது  25 வது   இடத்துக்கு   வந்துள்ளது……எப்போதுமே   முன்னே  முன்னே    செல்லும்   யுனிவர்சிடி  மலாயா   இன்னும்   ஈராண்டுகளில்    உலகின்   100   சிறந்த  பல்கலைக்கழகங்களில்  ஒன்றாக  திகழப்போவதைக்    காணப்   போகிறோம்”,  என்றாரவர்.

ஆசியானின்  எட்டு   சிறந்த    பல்கலைக்கழகங்களில்    ஐந்து   மலேசியாவைச்   சேர்ந்தவை   என்று  கூறிய   அமைச்சர்   உலகப்   பல்கலைக்கழகங்களில்     ஆராய்ச்சித்துறையில்    சிறந்து   விளங்கும்     பல்கலைக்கழகங்கள்   ஒரு   விழுக்காடுதான்   என்றும்   அந்த   ஒரு   விழுக்காட்டில்   மலேசியப்  பல்கலைக்கழகங்களும்   இடம்பெற்றுள்ளன   என்றும்    குறிப்பிட்டார்.