சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, ‘பூகிஸ்’ பற்றிக் கருத்துத் தெரிவித்த டாக்டர் மகாதிர் முகம்மட்டை மீண்டும் குறைகூறினார்.
“மனிதர் (மகாதிர்) ஆத்திரங் கொண்டிருக்கிறார். ஆத்திரத்தால் நாடு மொத்தத்தையும் எரித்துவிடப் போகிறார்”, என்று சுல்தான் குறிப்பிட்டதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர்கூட சுல்தான் ஷராபுடின், முன்னாள் பிரதமர் பூகிஸ் இனத்தவரைக் கடற்கொள்ளையர்களுடன் ஒப்பிட்டுப் பேசியதைக் கண்டித்திருக்கிறார். மகாதிர் அக்டோபர் 14 கிளப்டோகிராசி- எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டபோது அப்படிப் பேசினார்.
அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்துக்காக இனம், சமயம் போன்ற உணர்ச்சிவசப்படவைக்கும் வைக்கும் விவகாரங்களைக் கையில் எடுப்பதைக் காணத் தாம் விரும்பவில்லை என்றார் சுல்தான். அது நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும்.
“இது குறித்து மலாய் ஆட்சியாளர்கள் கவலை கொள்கிறார்கள். ஒன்பது பேருமே கவலை கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர் மாநாட்டுக்கு முன் நடைபெறும் கூட்டங்களில் அது பற்றி விவாதித்திருக்கிறோம்.
“எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் விவகாரங்கள் சுய இலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன.
“இப்படிப்பட்ட விவகாரங்கள் சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி மக்களைப் பிளவுபடுத்தி விடும்”, என சிலாங்கூர் ஆட்சியாளர் குறிப்பிட்டார்.
அமைதியாக இருந்து மக்கள் பணத்தை சுரண்டுவார் இன்னொருத்தர்.
‘Syabas’ விற்பனையின் வழி சிலாங்கூர் மக்கள் வரிப் பணத்தைப் பின்கதவு வழியாக பெற்றவர் யாரோ?
pongadaa ! 1MDB ketka vakku ille ennnamo periya ….. mathiri pesaran …..