நஜிப் முறையாக நடக்கவில்லை என்றால் பெர்சே 3.0 ஐ தொடங்குங்கள்

 “கொள்கை விவகாரங்களில் பச்சோந்தியைப் போன்று மாறும் அவரை பார்க்கும் போது, அவர் ஒன்று கொள்கைப் பிடிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் ஏதோ ஒரு மறைவான சக்தி இயக்கிக் கொண்டிருக்க வேண்டும்.”

 

 

 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டால் தேர்வுக் குழு அமைப்பதில் எந்தப் பயனுமில்லை

லின் வென்குவான்: பிரதமர், தாம் வாய்மொழியாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமது உருமாற்றுத் திட்டங்கள் எதிலும் கூட உண்மையாக நடந்து கொள்ளவில்லை. தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்காக தேர்தல் ஆணையத்தை சீர்திருத்தப் போவதாக அவர் புதிதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

கொள்கை விவகாரங்களில் பச்சோந்தியைப் போன்று மாறும் அவரை பார்க்கும் போது, அவர் ஒன்று கொள்கைப் பிடிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் நோக்கத்தையும் ஏதோ ஒரு மறைவான சக்தி இயக்கிக் கொண்டிருக்க வேண்டும். இரண்டு வழிகளிலும் அவரது தலைமைத்துவம் பின் தங்கி விட்டது.

தேர்தல் ஆணையத்தை உண்மையிலேயே சீர்திருத்தம் செய்வது அம்னோவும் பிஎன்னும் பல விஷயங்களைப் பணயம் வைப்பதற்கு ஒப்பாகும். மோசடிகளையும் ஏமாற்று வேலைகளையும் நீக்கி விட்டால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அவற்றுக்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்திலிருந்து அகற்றி விட முடியும்.

அரை நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி புரிந்த பின்னர் வீழ்த்தப்படும் ஒரு கட்சியின் அரசாங்கத் தலைவர் என்னும் அவமானத்துடன் வரலாற்றில் இடம் பெறுவதைக் காண நிச்சயம் நஜிப் விரும்ப மாட்டார்.

ஒரு வேளை பிஎன்னை வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் நிராகரிப்பதின் மூலம் மோசடிகள் வழி பிஎன் வெற்றி பெறுவதற்கு செய்யப்பட்ட தந்திரங்கள் பலனளிக்காமல் செய்வது இரு தீர்வாக இருக்கலாம். அது நீண்ட கனவு என்றாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

ஜிஎச்கோக்: வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளைத் தீர்க்காமல் நஜிப் ரசாக் அடுத்த தேர்தல்களை நடத்த முயலுவது முற்றிலும் பொறுப்பற்ற, தீய நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும். அது நிச்சயம் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக இருக்கும்.

பத்தாயிரக்கணக்கான ஏன் நூறாயிரக்கணக்கான குடிமக்கள் அல்லாதவர்களும் படியாக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர்களும் ஆவி வாக்காளர்களும் தேர்தலில் வாக்களித்து நமது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போவதை நாம் ஏற்றுக் கொள்ளவே கூடாது.

அடையாளம் இல்லாதவன்_408b: நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதின்  நோக்கத்தையும் உணர்வையும் அது பாழாக்கி விட்டது. ஏனெனில் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் கடுமையான மோசடிகளை தீர்க்கும் எண்ணத்தை அந்தக் குழு கொண்டுள்ளது.

பிரதமர் நமது விவேகத்தையே அவமானப்படுத்துகிறார். தாம் மீண்டும் மீண்டும் பொய் சொல்லலாம் என அவர் எண்ணுகிறார். நாடாளுமன்றத் தேர்வுக் குழு பற்றிப் பேசுவதையே நிறுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு பித்தலாட்டம். பொய்.

நாம் ஒன்றிணைந்து நோன்புப் பெருநாளைப் பயன்படுத்திக் கொண்டு நமது நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் பெர்சே குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். நாம் ஏன் பெர்சேயை ஆதரிக்க வேண்டும் என நாம் நமது கிராமப்புற சகோதரர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

இசா@பென்யூ: வாக்காளர் பட்டியல் கறை படிந்திருந்தால் யாருக்கு என்ன கவலை? வாக்காளர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்பதே அடிப்படை விஷயம். அவர்கள் வாக்களிக்க முடியாது என்னும் போது ஏன் இவ்வளவு பிரச்னை?

ஐந்து மாநிலங்களில் வென்ற பின்னரும் தேர்தல் ஆணையம் பற்றி எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை. அவை முதிர்ச்சி அடைந்து மக்களைச் சந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தாங்கள் வென்ற மாநிலங்களில் அவை நன்றாக பணியாற்றியிருந்தால் அவை புத்ராஜெயாவை பிடிக்கக் கூடும்.

பக்காத்தானை பிகேஆர் குழப்பி விட்டதை நாம் அறிவோம். பாஸ் கட்சி ஆதரவை இழந்து வருகிறது. டிஎபி சீனர்களை மட்டுமே சார்ந்துள்ள இனவாதக் கட்சியாகும்.

ஆகவே 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் தெளிவானது. பிஎன் மீண்டும் வெற்றி பெறும். அதற்கு பக்காத்தானுக்கு ஒழுங்காக ஆட்சி புரியத் தெரியாமல் போனதே காரணமாகும்.

பேஸ்: அன்புள்ள இசா@பென்யூ,  நான் உங்கள் கருத்துக்களைப் படித்துக் கொண்டு வருகிறேன். அதில் எதுவும் எனக்குப் பிடித்ததாக இல்லை. என்றாலும் எந்த ஒரு ஜனநாயக முறையையும் போன்று நான் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். அந்தக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.

என்னுடைய ஒரே ஒரு வருத்தம் இதுதான்: நீங்கள் மலாய்க்காரர் என்றால் நானும் மலாய்க்காரன்தான். நாட்டுக்கு இப்போது தேவைப்படகின்ற மலாய்க்காரர்கள் மாதிரி நீங்கள் இல்லை.

கியான்ஜின்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தம் சாத்தியமில்லை என்பதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்:

1) அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால் பிஎன் வெற்றி பெறும் வாய்ப்பே இல்லை.

2) அஞ்சல் வாக்குகள் இல்லை என்றால்  பிஎன் வெற்றி பெறும் வாய்ப்பே இல்லை.

அடையாளம் இல்லாதவன்: இன்னும் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன. செப்டம்பர் 30ம் தேதி புதிய வாக்காளர் பதிவு நிறைவு பெறுகிறது. அப்போது ஆயிரமாயிரம் இந்தோனிசியர்கள் வாக்காளர்களாகப் பதிவாகி இருப்பார்கள். நாடாளுமன்றம் அடுத்து கலைக்கப்படும். போதுமான அவகாசம் இல்லாததால் தான் ஒன்று செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கையை விரித்து விடும். 13வது பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கும்.