லியு: சட்டமன்ற பேச்சுமீதான விசாரணை ஒரு தப்பான முன்மாதிரியாக அமையும்

போலீசார்  செனாய்   சட்டமன்ற    உறுப்பினர்   வொங்   ஷு   கிமீது   விசாரணை   நடத்துவது   ஒரு  ஆபத்தான  முன்மாதிரியாக   அமைந்து   விடும்    என   ஜோகூர்  டிஏபி  தலைவர்   கூறினார்.

வொங்   ஜோகூர்   சட்டமன்றத்தில்   பேசியபோது   ஜோகூர்   மந்திரி   புசார்     முகம்மட்  காலிட்    நோர்டின்     ஊழலுடன்   தொடர்புப்படுத்தப்பட்டிருக்கிறாரா  என்று   கேள்வி   எழுப்பினார்.  அதற்குத்தான்   போலீஸ்  விசாரணை.

“சட்டமன்ற   உரைகளின்மீது   போலீஸ்   விசாரணை    நடத்துவது   ஒரு  ஆபத்தான   முன்மாதிரியாக  அமையும்.  அது      மக்கள்    சார்பில்   கேள்விகள்   கேட்பதற்கும்   மற்ற   விவகாரங்களை   எழுப்புவதற்கும்   தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதி  ஒருவருக்குள்ள   உரிமைகளையும்  சலுகைகளையும்   மீறுகிறது”,  என்று  லியு   சின்   தொங்   இன்று  ஓர்    அறிக்கையில்     குறிப்பிட்டார்.

“வொங்  ஒரு   கேள்வியை   முன்வைத்தார்.  அதற்குத்   தேவை  முறையான  ஒரு  பதில்.   போலீஸ்   விசாரணை   அல்ல.

“பிரதிநிதிகள்     நாடாளுமன்றத்திலும்   சட்டமான்றங்களிலும்    தயவுதாட்சண்யமின்றி  பேச வேண்டும்  என்பதற்காகத்தான்   அவர்களுக்குச்   சட்டவிலக்களிப்பு   வழங்கப்பட்டுள்ளது”,  என்றாரவர்.