டிஏபி மறுதேர்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆர்ஓஎஸ்ஸிடம் வழங்கி முடிவுக்காகக் காத்திருக்கிறது

நவம்பர்  12இல்  நடைபெற்ற   கட்சி   மறுதேர்தல்   தொடர்பான    ஆவணங்களைச்  சங்கப்  பதிவகத்திடம்    வழங்கியதன்வழி   டிஏபி   அதன்  பொறுப்புகளை   நிறைவேற்றி  விட்டதாக    கட்சியின்   அமைப்புச்  செயலாளர்   அந்தோனி   லோக்   இன்று   கூறினார்.

மத்திய   செயல்குழுவின்     மறுதேர்தல்  தொடர்பான   ஆவணங்கள்  எல்லாம்  கொடுக்கப்பட்டு   விட்டன.

“இதில்  ஆர்ஓஎஸ்   திருப்தியுற்று  டிஏபி-இன்  அதிகாரப்பூர்வ   தகுதியை    நிலைநிறுத்த   வேண்டும். இதற்குப்  பிறகும்   அது   பிரச்னை    தராது    என்று   நம்புகிறோம்”,  என்று   புத்ரா  ஜெயாவின்   ஆவணங்களைச்   சேர்ப்பித்த  பின்னர்   செய்தியாளர்களிடம்    அவர்    தெரிவித்தார்.

ஆர்ஓஎஸ்   அதிகாரி  எஸ்.எச்.  சல்மா   ஆவணங்களைப்   பெற்றுக்கொண்டார். ஆவணங்களில்   2015   நிதி   அறிக்கை,  பாரம் 9    என்றழைக்கப்பட்டும்   சரிபார்ப்புப்   பட்டியல்,  டிஏபி   சிறப்புக்   கூட்டத்தின்   நடவடிக்கைக்  குறிப்புகள்,  புதிய   செயல்குழு    உறுப்பினர்   பட்டியல்   ஆகியவை   உள்ளிட்டிருந்தன.