நஜிப் : மலபாரிகளையும் நாங்கள் மலாய்க்காரர்களாகக் கருதுகிறோம்

இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து வந்த, முஸ்லீம் இந்திய வம்சாவழிகள் உட்பட, பல்வேறு இன குழுக்களை, மலாய் இனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் மூலம், அம்னோ திறந்த வெளிப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்று நஜிப் இராசாக் தெரிவித்தார்.

மலேசியாவில் “மலபாரி” மலாய் இனத்தின் ஒரு பாகமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, அவர்களைத் திரும்பி போ என்று துரத்தியடிக்கும், குறுகிய சிந்தனையில் அம்னோ  சிக்கிக் கொள்ளவில்லை என்று அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

“அரசாங்கத்தின் பார்வையில், எந்த இனமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை, இங்கு வாழும் 32 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அனைவரும் மலேசியர்கள்தான்,” என்று, இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடந்த அம்னோ 71-வது மாநாட்டில் தலைமை உரையாற்றியபோது நஜிப் தெரிவித்தார்.

மலபாரிகள், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலபார் கடற்கரை பகுதியிலிருந்து வந்தவர்கள்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் தோற்றம், மலபார் சந்ததியினருடன் தொடர்புடையது என்று தொடர்புபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காலனித்துவ சிந்தனையின் கட்டமைப்பிற்குள் சிக்கியிருக்கும், “ஒரு முன்னாள் அம்னோ தலைவர்” பூகிஸ் சந்ததியினரை அவமதித்து பேசியதை நஜிப் நினைவுகூர்ந்தார்.