ஒரு காலத்தில் அம்னோ அரசாங்கத்தை காபிர்கள் என்று அழைத்தவர்தான் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஆனால் இன்று அவர் அம்னோவை ஆதரிப்பதுபோல் தெரிகிறது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.
“காலனித்துவகால அரசமைப்பையும் சட்டங்களையும் வைத்துக்கொண்டிருப்பதால் காபிர்கள் என்று அழைத்த ஹாடி இப்போது அம்னோவுடன் ஒத்துழைக்கிறார்.
“ஹாடி அம்னோவின் வலுவான ஆதரவாளராக மாறியிருக்கிறார்.
“பாஸ் 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் பக்கத்தான் ஹராபானுக்குக் கிடைக்கும் வாக்குகள் குறைந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
“அதேவேளை (தேர்தலில்) பாஸும் தோல்வியுறும்”, என மகாதிர் நேற்றிரவு வலைப்பதிவு ஒன்றில் கூறினார்.