அம்னோ தலைமைத்துவத்தையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவமதித்த த மலேசியன் இன்சைட்(டிஎம்ஐ) செய்தித்தள உரிமையாளருக்கு எதிராக அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்னோ பேராளர் ஒருவர் வலியுறுத்தினார்.
மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் ஆவணங்களின்படி டிஎம்ஐ -இன் உரிமையாளர் பரிடா பேகம்.
டிஎம்ஐ தலைமைச் செய்தி ஆசிரியர் ஜஹபர் சடிக்கின் சகோதரியான பரிடா, சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலியின் மனைவியாவார்.
“பரிடா பேகத்தை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்பது பேராளர்களான எங்களின் விருப்பம்”, என பினாங்கு பேராளர் முகம்மட் நஷ்ரோல் ஹிஷாம் கோலாலும்பூரில் புத்ரா உலக வணிக மையத்தில் நடைபெறும் அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்தில் கூறினார்.
“டிஎம்ஐ நம் தலைவர்களை, நம் பிரதமரை, நம் தலைவரைத் தாக்கியது…….அதிகாரிகள் இதை அனுமதிக்கக்கூடாது. கடைசிவரை விடக்கூடாது. டிஎம்ஐ நம் தலைமைத்துவத்தை அவமதித்திருக்கிறது”, என தாசேக் குளுகோர் அம்னோ தலைவர் கூறினார்.
முகம்மட் நஷ்ரோல் டிஎம்ஐ நஜிப்பையும் அம்னோவையும் தாக்கியதாகக் கூறினாரே தவிர என்ன சொல்லித் தாக்கியது என்பதைக் குறிப்பிடவில்லை.