சிறிலங்கா துறைமுகத்தை முறைப்படி சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது

 

நேற்று சனிக்கிழமை, சிறிலங்கா அதன் முக்கிய தெற்கு துறைமுகத்தின் வாணிக நடவடிக்கைகளை சீன நிறுவனத்திடம் முறைப்படி ஒப்படைத்தது. அது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததின்படி கிடைக்க வேண்டிய யுஎஸ்$1.12 பில்லியனில் ஒரு பகுதித் தொகையாக யுஎஸ்$292-ஐ சிறிலங்கா பெற்றுக் கொண்டதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீரா கூறினார்.

ஜூலையில், சீனா மெர்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸுடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி சீனாவால் கட்டப்பட்ட ஹம்பன்தோடா துறைமுகம் 99-ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கான முக்கியமான கடல்வழிப் பாதையாக அமைந்துள்ளது.

ஹம்பன்தோடா துறைமுக கூட்டுத்தொழிலின் வருமானமாகக் கிடைக்க வேண்டியதில் முதல் பகுதியாக நாம் யுஎஸ்$292 மில்லியனை இன்று பெற்றக் கொண்டோம் என்று அவர் கூறினார்.

இந்த யுஎஸ்$1.5 பில்லியன் துறைமுகம் 2010 ஆண்டில் தொடங்கப்பட்டது. வாணிப நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால் பெரும் நட்டத்தை எதிர்கொண்டிருந்தது.