நில விவகாரத்துக்குத் தீர்வுகாண 40ஆண்டுகளா எடுத்துக்கொள்வது?

உங்கள்  கருத்து:  ‘ரொம்பப்  பேசுறீங்க.  தயவு  செய்து  போயிடுங்கள்’- குடியிருப்பாளர்களிடம்  கண்டிப்பான  குரலில்   கூறுகிறார்    பகாங்    மந்திரி   புசார் 

நெகராவான்: “40  ஆண்டுகள்   காத்திருந்தீர்கள்,  மேலும்   பத்தாண்டு   முடியாதா?  நிறைய  பேசுறீங்க.  தயவு   செய்து   போயிடுங்க.  சரியா?

“பை-பை  வணக்கம்,  வணக்கம்,  நன்றி”.      இப்படித்தான்  பேசினார்   பகாங்  எம்பி  அட்னான்  யாக்கூப்  நிலப்  பிரச்னையைத்  தீர்த்து  வைப்பார்  என்று   நம்பிச்  சென்ற    கேமரன் மலை   குடியிருப்பாளர்களிடம்.

அம்னோ  ஆட்சியில்  உள்ள   ஒரு  மந்திரி   புசாரிடமிருந்துதான்  இப்படிப்பட்ட  மரியாதைக்  குறைவான   பேச்சைக்  கேட்க  முடியும்.

பெயரிலி 2460391489930458:    “கவனம்  செலுத்தும்  அரசாங்கம்”,  மக்களுக்கு  முன்னுரிமை”  என்று   கூறிக்கொள்ளும்   பிஎன்  அரசாங்கம்  எப்படிப்பட்டது   என்பதற்கு   நல்ல   எடுத்துக்காட்டு.

“கவனம்  செலுத்தவெல்லாம்  நேரமில்லை,  வீட்டுக்குப்  போங்கய்யா”  என்று  சொல்வதுபோல்   இருக்கிறது.

பிபி1: கேமரன் மலை   மக்களே,  கண்களைத்   திறந்து   பாருங்கள்,  உங்கள்    வாக்குகள்    இந்த  மந்திரி  புசாரை    ஆட்சியில்   அமர்த்த  எப்படி  உதவியுள்ளன   என்பதை.

இது  உங்களுக்குத்   தேவைதானா?  பிஎன்னையும்  மஇகா-வையும்  துரத்தி  அடிக்க   வேண்டிய  நேரம்  வந்தாயிற்று.

நடுப்பாதை:  காணொளியைப்   பார்க்கையில்  பிரச்னையைத்   தீர்க்கும்   அரசியல்  உறுதிப்பாடு  பகாங்  மந்திரி  புசாருக்கு   இல்லை    என்றே   தோன்றுகிறது.

நிதானத்தை  இழக்கப்   போவது    தெரிந்து    அவர்   அந்த  இடத்தைவிட்டு   அகன்றார்.

பெயரிலி40f4:  அட்னானுக்கு  மட்டுமல்ல.  அம்னோ/ பிஎன்னுக்கும்  இந்திய  சமுகத்தின்  குறைகளைக்  கேட்க   நேரமில்லை. எதிரணியும்   அப்படித்தான்.   இந்திய  மலேசியர்  வாக்குகள்  மட்டும்தான்  இவர்களுக்கு    வேண்டும்.

டாக்டர்  சுரேஷ்:  மஇகா,  இந்தியர்களுக்கென   ஒரு  செயல்திட்டம்  தயாரித்திருப்பதாக    வாய்  கிழிய    கத்தினீர்களே    அதில்  இப்படிப்பட்ட   திமிர்  பேச்சும்     அடக்கமா.

கடுமையாக    உழைக்கும்    இந்தக்     குடியானவர்களுக்கு   40 ஆண்டுகளுக்குப்  பிறகும்   நிலப்பட்டா   வாங்கிக்  கொடுக்க   உங்களால்  முடியவில்லை   என்றால்   அவர்கள்  எப்படி   வாழ்க்கை    நடத்துவது?

மஇகா  பிஎன்  பங்காளிக்  கட்சி.  இந்த  விவகாரத்தில்    மஇகாவின்  பங்கு   என்ன?

பெயரிலி 767061504497195:  இப்போது   தெரிகிறதா  யாருக்கு   வாக்களிக்கக்  கூடாது   என்பது.

ஏஜே:  எதற்காக   மலேசியர்கள்   பரிவற்ற,   அக்கறையற்ற   மரியாதைக்  குறைவான   அரசியல்வாதிகளுக்கு  வாக்களிக்கிறார்களோ,  எனக்குப்  புரியவில்லை.

பாக்ஸைட்  எடுக்கும்  தவக்கைகளாக    நச்சுப்பொருளைக்  கொண்டு   வந்து  கொட்டும்   வெளிநாட்டவராக   இருந்தால்   சிவப்புக்  கம்பளம்   விரித்து  வரவேற்பார்கள்.