அமெரிக்கத் தூதரகத்தின்முன் பாலஸ்தீன ஒற்றுமை அணிவகுப்பு, ஹரப்பான் நடத்தியது

 

கோலாலம்பூர் அமெரிக்கத் தூதரகத்தின்முன் பாலஸ்தீனத்திற்கு ஆரதவு தெரிவித்து பக்கத்தான் ஹரப்பான் இன்று எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தியது.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இன்று பிற்பகல் மணி 2 அளவில் தாபுங் ஹஜியின் முன் எதிர்ப்பாளர்கள் கூடத் தொடங்கினர். அங்கிருந்து புறப்பட்டு ஜாலான் துன் ரசாக்கிலுள்ள அமெரிக்கத் தூதரத்தை நோக்கி நடந்தனர்.

அந்த அணிவகுப்பில் முன்னாள் பிரதமரும் ஹரப்பான் தலைவருமான மகாதிர் முகமட் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் இருந்தனர்.

சுமார் 500 பேர் கலந்துகொண்டாத கருதப்படும் அக்கூட்டத்தில் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின், அமனா தலைவர் முகமட் சாபு, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், அமனா துணைத் தலைவர் சலாஹுடின் அயுப் மற்றும் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா ஆகியோரும் இருந்தனர்.

அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்திச் சென்றனர்.