அம்னோ-பிஎன் தலைவர்களைத் ‘தடுத்து வைத்தல் – பின்னர் விடுவித்தல்’ நாடகத்தை எம்ஏசிசி நிறுத்த வேண்டும்

மஜ்லிஸ்  அமனா   ரக்யாட்(மாரா)   தலைவர்   அனுவார்  மூசாமீதான  ஊழல்  குற்றச்சாட்டு  கைவிடப்பட்டது  வியப்பளிக்கவில்லை    என்று   சுங்கை   பட்டாணி   ஜொஹாரி   அப்துல்   கூறினார்.

“இது  முன்கூட்டியே  தெரிந்த   விசயம்தான்  என்று   குறிப்பிட்ட   அவர், அம்னோ- பிஎன்   தலைவர்   ஒருவர்   சட்ட   நடவடிக்கை    எடுக்கப்படாமல்  விடுவிக்கப்படுவது   இது   முதல்   முறை   அல்ல.

“இதைப்    பார்க்கையில்  முன்பு    அவருக்கு   எதிராக   மேற்கொள்ளப்பட்ட   நடவடிக்கைகள்   எல்லாம்  மக்களின்    வாயை   அடைத்து  வைக்க  போடப்பட்ட   அரசியல்    நாடகம்தானா  என்று   கேட்கத்   தோன்றுகிறது”,  என்றவர்  ஓர்  அறிக்கையில்   வினவினார்.

அரசாங்கம்   நாடகமாடுவதை   நிறுத்த   வேண்டும்   என்று   ஜொஹாரி    வலியுறுத்தினார். மக்கள்  இப்போது  நாலும்   தெரிந்தவர்களாக   இருக்கிறார்கள்.

மாரா  தலைவராக   இருந்த  அனுவார்  மூசா,  தம்  பதவியைப்  பயன்படுத்தி     மாரா  முதலீட்டு   நிறுவனத்தையும்   யுனிவர்சிடி  கோலாலும்பூரையும்     கிளந்தான்  கால்பந்து  குழுவுக்குப்   பண உதவி  செய்து  ஆதரவு  வழங்கக்  கட்டாயப்படுத்தினார்   என்று   ஜனவரி   12-இல்   குற்றஞ்சாட்டப்பட்டது.

அவ்வாறு  குற்றஞ்சாட்டியவர்   ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு   இஸ்மாயில்   சுல்தான்  இப்ராகிம்.  அதற்கான   ஆதாரங்களையும்   அவர்   எம்ஏசிசி-இடம்   வழங்கினார்.

துங்கு   இஸ்மாயில்   மலேசிய  கால்பந்து   சங்கத்   தலைவருமாவார்.

குற்றச்சாட்டை   அடுத்து   அனுவார்,  மாரா  தலைவர்  பதவியிலிருந்து   இடைநீக்கம்    செய்யப்பட்டார்.