துருக்கி கிழக்கு ஜெருசலத்தில் அதன் தூதரகத்தைத் திறக்கப் போகிறதாம்

 

துருக்கி கிழக்கு ஜெருசலத்தில் அதன் தூதரகத்தை திறக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக துருக்கி அதிபர் தேயிப் எர்டோகன் கூறுகிறார்.

ஆனால், அவர் இதை எப்படி செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இஸ்ரேல் முழு ஜெருசலத்தையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதோடு அந்நகரை பகுக்க முடியாத தலைநகர் என்றும் அது கூறுகிறது.

ஆண்டவன் கிருபையால், நாம் அதிகாரப்பூர்வமாக, ஆண்டவனின் அனுமதியோடு, நமது தூதரகத்தை அங்கு திறக்கும் நாள் நெருங்கி விட்டது என்று எர்டோகன் அவரது எகே கட்சியின் உறுப்பினர்களிடம் பேசுகையில் கூறினார்.

இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்தும், துருக்கியும் உட்பட, டெல் அவிவ்வில் இருக்கின்றன.