தேசிய போலீஸ் படைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம், எச்ஐவி வைரஸ்களை ஊசிவழி செலுத்த முயலும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று போலீஸ் அறிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
இரத்தத்தில் சர்க்கைரை இருக்கிறதா என்பதைக் கண்டறிய வந்திருப்பதாகக் கூறும் அவர்கள் தங்களை ஒரு மருத்துவக் கல்லூரியின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறார்களாம்.
“புக்கிட் அமான் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை. அதை மக்கள் நம்ப வேண்டாம்”, என நூர் ரஷிட் வாட்ஸ்அப்
போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் செய்தி குறித்துக் கேட்டபோது கூறினார்.
என்றாலும், முன்பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம், ஏமாற்றும் பேர்வழிகளாக இருக்கலாம்.